கள ஆய்வில் கிடைக்கும் பொருட்கள் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்படும்: அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

சென்னை: தமிழக சட்டப் பேரவைக்கு வெளியில் அமைச்சர் தங்கம் தென்னரசு நிருபர்களிடம் கூறியதாவது: கிறிஸ்து பிறப்பதற்கு, 1200 ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழனுக்கு என்று ஒரு நாகரீகம் இருந்தது. நம்மிடத்தில் எழுத்தறிவு இருந்தது என்பதை எடுத்து காட்டும் வகையில் ஆய்வுகள் அமைந்துள்ளது. சிவகளையில் கிடைத்துள்ள பானை ஓடுகளில் ஆதன் என்ற பெயர் இடம் பெற்றுள்ளது. அதே பெயர் கீழடியிலும் கிடைத்துள்ளது. ஆய்வுகளில் கிடைத்துள்ள பொருநை நாகரீகத்துக்கான பொருட்கள் இந்த அருங்காட்சியில் காட்சிப்படுத்தப்படும். தொடர்ந்து கள ஆய்வு செய்யப்படும். வருங்காலத்தில் கிடைக்கும் பொருட்களையும் அங்கு காட்சிபடுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>