×

போதை மருந்து விவகாரம் நடிகர் ரவிதேஜாவிடம் விசாரணை

திருமலை: டோலிவுட் போதை மருந்து விவகாரத்தில் மேலும் ஒரு நடிகர் ரவிதேஜா அமலாக்கத்துறையினரிடம் ஆஜரானார். ஐதராபாத் டோலிவுட் போதை மருந்து வழக்கு விவகாரத்தில் விசாரணையின் ஒரு பகுதியாக நடிகர் ரவிதேஜா, கார் டிரைவர் சீனிவாஸ் ஆகியோர் அமலாக்கத்துறை இயக்குனர் அலுவலகத்தில் நேற்று ஆஜராகினர். இந்நிலையில், நேற்று அதிகாலையில் இருந்து வீட்டில் ரவிதேஜா இல்லாத நிலையில், அவரது விருந்தினர் மாளிகையில் இருந்து நேரடியாக ஐதராபாத் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு சென்று ஆஜராகியுள்ளார். அமலாக்கத்துறை அலுவலகத்தின் வெளியே ஊடகத்தினர் இருந்ததை கண்டதும் நிற்காமல் அலுவலகத்திற்குள் ஓடிச்சென்றார்.

கடந்த 5ம் தேதி முதல் போதை மருந்து விவகாரத்தில் விசாரணைக்கு ஆஜராக செல்லும் சினிமா நட்சத்திரங்கள், ஊடகத்தினர் கண்களில் படாமல் இருக்க ரகசிய இடங்களில் இருந்து சென்று வருகின்றனர். கடந்த 2017ம் ஆண்டு கலால்துறை அதிகாரிகள் நடிகர் ரவிதேஜா மற்றும் கார் டிரைவர் ஸ்ரீனிவாஸ் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இந்நிலையில், இந்த தகவல்களை வைத்து நேற்று சப்ளையர் கெல்வினுடன் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டதா? என்ன தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரணை நடத்தினர். இந்த போதைப் பொருள் வழக்கில் திரைப்படத்துறையை சேர்ந்த 12 பேருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதன்படி நவ்தீப்புடன் எப்-கிளப் பொதுமேலாளர் வரும் 13ம் தேதி, முமைத்கான் 15ம் தேதி, தனிஷ் 17ம் தேதி, தருண் 22ம் தேதி ஆஜராக உள்ளனர்.

Tags : Ravi Teja , Actor Ravi Teja is under investigation for drug dealing
× RELATED ரவி தேஜாவின் பான் இந்திய திரைப்படமான...