கிணத்துக்கடவு அருகே அரசு பள்ளி வகுப்பறையில் மயங்கி விழுந்து பிளஸ் 2 மாணவி திடீர் சாவு

கிணத்துக்கடவு: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே பட்டணம் கிராமத்தை சேர்ந்தவர் மகாலட்சுமி. தேசிய நெடுஞ்சாலைத்துறை அலுவலக உதவியாளர். இவரது மகள் சிவசுந்தரி நெகமம் அருகே சேரிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். கடந்த 1ம் தேதி பள்ளி திறக்கப்பட்டு மாணவி சிவசுந்தரி ஆர்வமுடன் சென்று வந்துள்ளார். நேற்று காலை 8.45 மணியளவில் பள்ளிக்கு வந்த சிவசுந்தரி வகுப்பறைக்கு சென்று அமர்ந்த சிறிது நேரத்தில் மயக்கமடைந்தார். உடனே நெகமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் பொள்ளாச்சி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கும் மயக்கம் தெளியாததால் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  அங்கு பரிசோதித்த டாக்டர்கள் மாணவி இறந்துவிட்டதாக கூறினர். சிவசுந்தரிக்கு காய்ச்சல், சளிக்கான அறிகுறி இல்லை என ஆசிரியர்கள் தரப்பில் கூறப்பட்டது. மாணவி திடீரென இறந்ததற்கான காரணம் குறித்து நெகமம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories:

More