ஜம்மு காஷ்மீரில் உள்ள வைஷ்ணவ தேவியை தரிசிக்க 10 கிமீ. நடந்து சென்ற ராகுல்

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் உள்ள வைஷ்ணவ தேவி குகை கோயிலுக்கு ராகுல் காந்தி 10 கி.மீ. நடை பயணமாக யாத்திரை சென்று தரிசனம் செய்தார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, நாடு முழுவதும் உள்ள பல்வேறு கோயில்களுக்கு அடிக்கடி சென்று தரிசனம் செய்து வருகிறார். நேற்று அவர் இரண்டு நாட்கள் பயணமாக ஜம்மு காஷ்மீர் வந்தார். அவரை மாநில காங்கிரஸ் தலைவர் குலாம் அகமது மிர் உள்ளிட்டோர் வரவேற்றனர். மக்கள் அவர் மீது பூக்களை தூவி வரவேற்றனர்.

பின்னர், காரில் காத்ரா சென்ற ராகுல் காந்தி, அங்கிருந்து ரியாசி மாவட்டத்தின் திரிகூட மலையில் அமைந்துள்ள வைஷ்ணவ தேவி குகை கோயிலுக்கு 10 கிமீ நடை பயணமாக சென்றார். அவருடன் ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர்களும் சென்ளறனர். யாத்திரையின் முடிவில் கோயிலுக்கு சென்று ராகுல் தரிசனம் செய்தார். இன்று மதியம் திரிகூட நகரில் உள்ள விடுதியில் காங்கிரஸ் தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளார். அதன் பிறகு மதிய உணவு விருந்தில் பங்கேற்கும் அவர் மாலை டெல்லி திரும்புகிறார்.

Related Stories:

>