×

பயிர் காப்பீட்டிற்கான இழப்பீடு தொகையை கேட்டு வழக்கு: ஒன்றிய அரசு பதிலளிக்க உத்தரவு

மதுரை: தஞ்சை மாவட்டம் சுவாமிமலையைச் சேர்ந்த சுந்தர விமலநாதன், ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: காவிரி டெல்டா பகுதியில் கடந்தாண்டு டிச. 2 முதல் டிச. 5 வரை கனமழையால் ரூ.345 கோடி அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக அறிக்கையளிக்கப்பட்டது.  டெல்டா பகுதியைச் சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திருந்தனர். அவர்களுக்கு எந்தவிதமான ரசீதும் வழங்கவில்லை. நிவர் மற்றும் புரவி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான நிவாரணம் தொடர்பாக இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இதுவரை எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை.

தஞ்சை மாவட்டத்தின் 59 வருவாய் கிராமங்களில் கடந்த குறுவை பருவத்திற்கான பயிர் காப்பீட்டு இழப்பீடு வழங்கப்படவில்லை. எனவே கடந்த 2020-21ல் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை வட்டியுடன் வழங்கவும், பயிர்காப்பீடு தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காண மாவட்ட அளவில் குறைதீர் அலுவலரை நியமிக்கவும், இன்சூரன்ஸ் நிறுவனங்களின் செயல்பாட்டை தேசிய அளவிலான குழு கண்காணிக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் எம்.துரைச்சுவாமி, கே.முரளிசங்கர் ஆகியோர் மனுவிற்கு ஒன்றிய வேளாண் துறை முதன்மை செயலர், தமிழக வேளாண்மைத் துறை முதன்மை செயலர், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அக். 28க்கு தள்ளி வைத்தனர்.


Tags : United States Government , Case for Compensation for Crop Insurance: Order of the United States Government to Respond
× RELATED அடுத்த நிதியாண்டிற்கான உச்சவரம்பை...