2,207 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு: ஆசிரியர் தேர்வாணையம் அறிவிப்பு

சென்னை: ஆசிரியர் தேர்வாணையம் வெளியிட்ட அரசாணை: 2020-21ம் ஆண்டுக்கான பள்ளி, கல்வி துறையின் முதுநிலை மற்றும் முதுநிலை உதவி ஆசிரியர்களுக்கான 2,207 காலி பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரும் 16ம் தேதி முதல் அக்டோபர் 17ம் தேதி மாலை 5 மணி வரை வரவேற்கப்படுகிறது. தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான கணினி தேர்வு நவம்பர் 13, 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடைபெறும்.

பள்ளிக் கல்வி துறையின் மூலம் தமிழ் 271, ஆங்கிலம் 192, கணிதம் 114, இயற்பியல் 97, வேதியியல் 191, தாவரவியல் 92, உயிரியல் 109, வணிகவியல் 313, பொருளாதாரம் 289, வரலாறு 115, நிலவியல் 12, அரசியல் அறிவியல் 14, வீட்டு அறிவியல் 3, உயிரி வேதியியல் 1, இந்திய கலாச்சாரம்  3, மற்றும் உடற்கல்வி இயக்குநர் 39, கணினி வழிநடத்துனர் 44 பணியிடங்களுக்கு நிரப்பப்பட உள்ளன.

அதேபோல், சிறுபான்மையினர் துறையின் மூலம் மொத்தம் 9, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலவாரியம் துறையின் மூலம் தமிழ்  6, ஆங்கிலம் 1, வேதியியல் 3, உயிரியியல் 1, பொருளாதாரம் 2, வரலாறு 3, நிலவியல் 1 ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மேலும், சென்னை மாநகராட்சி மூலம் தமிழ் 7, ஆங்கிலம் 6, கணிதம் 5, இயற்பியல் 1, வேதியியல் 2, தாவரவியல் 4, உயிரியல் 2, வரலாறு 1, பொருளாதாரம் 4, வணிகவியல் 1, வீட்டு அறிவியல் 1, உடற்கல்வி இயக்குநர் 1 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

Related Stories:

>