திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி குழு கூட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி குழு அலுவலகத்தில் மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.வி.ஜி.உமாமகேஸ்வரி தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் டி.தேசிங்கு, செயலாளர் கென்னடி பூபால ராயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் கோ.சுதாகர், எம்.சித்ரா, சாரதம்மா முத்துசாமி, எம்.ஏ.ராமஜெயம், தே.அருண்ராம், த.தேவி, கி.கீதா, கே.யு.சிவசங்கரி உதயகுமார், ச.சரஸ்வதி சந்திரசேகர், ஜி.இந்திரா குணசேகர், ஆ.சதீஷ்குமார் உள்பட மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பொதுமக்களுக்கு தேவைகளுக்கு ஏற்ப சாலை வசதி, குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி உள்பட அடிப்படை வசதிகளை மேற்கொள்ள அனைத்து மாவட்ட குழு உறுப்பினர்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்ய தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.

Related Stories:

More
>