திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக ஆலோசனை கூட்டம்: நாளை நடைபெறுகிறது; அமைச்சர் சா.மு.நாசர் அறிவிப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளரும், பால்வளத்துறை அமைச்சருமான ஆவடி சா.மு.நாசர் வெளியிட்டுள்ள அறிக்கை: திருவள்ளூர் மத்திய மாவட்ட ஒன்றிய நகர பேரூர் திமுக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நாளை (11 ம் தேதி) மாலை 4 மணியளவில் காக்களூர் நெடுஞ்சாலையில் உள்ள ஆர்.எம்.கெஸ்ட் ஹவுசில் என்னுடைய தலைமையில் நடைபெறுகிறது. தலைமை செயற்குழு உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ, மாநில மாணவர் அணி இணைச் செயலாளர் சி.ஜெரால்டு, மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் கே.ஜெ.ரமேஷ், காயத்திரி ஸ்ரீதரன், ம.இராஜி, எஸ்.ஜெயபாலன், பா.நரேஷ்குமார், த.எத்திராஜ், வி.ஜெ.சீனிவாசன், வி.சிங்காரம், ஆர்.எஸ்.ராஜராஜன், கு.சேகர், எம்.குமார், ஜி.விமல்வர்சன், ஜெ.மகாதேவன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

 திருவள்ளூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ஜெயசீலன் வரவேற்புரை ஆற்றுகிறார். எனவே இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக முப்பெரு விழா குறித்தும், ஜனநாயக விரோத ஒன்றிய பாஜக அரசை கண்டித்து 20 ஆம் தேதி வீடுகளின் முன்பு கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளதால் கூட்டத்திற்கு ஒன்றிய, நகர, பேரூர் திமுக செயலாளர்கள், பொறுப்பாளர்கள், அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் அனைவரும் தவறாமல் பங்கேற்று சிறப்பிக்க வேண்டுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories:

>