கொரோனா பாதிப்பு காரணமாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய டிசம்பர் 31ம் தேதி வரை கால அவகாசம் நீட்டித்தது ஒன்றிய அரசு..!

டெல்லி: 2021-2022 ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய டிசம்பர் 31ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முதலில் ஜூலை 31 வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, கொரோனா தாக்கம் காரணமாகப் பலரும் வருமானவரிக் கணக்கை ஜூலை 31ம் தேதிக்குள் தக்கல் செய்ய முடியாமல் அதை நீட்டிக்க வேண்டுகோள் விடுத்தனர்.

இதையடுத்து, நேரடி வரிகள் வாரியம் இந்த அவகாசத்தை செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.  நாட்டின் பல பகுதிகளில் கொரோனா தாக்கம் இன்னும் முழுவதுமாக நீங்கவில்லை,.   எனவே வரி செலுத்துவோர் இந்த கால அவகாசத்தை மேலும் நீட்டிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

மேலும், அவர்கள் கோரிக்கையை ஒன்றிய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.  இன்று நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்த கால அவகாசம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி 2021 – 22 ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்யக் கால அவகாசத்தை டிசம்பர் 31 வரை நீட்டித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

More
>