×

அமேசான் நிறுவனத்துக்கு பின்னடைவு!: ஃபியூச்சர் ரீடெய்ல் - ரிலையன்ஸ் இடையிலான ஒப்பந்தத்துக்கு விதித்த தடையை நிறுத்தி வைத்தது சுப்ரீம்கோர்ட்..!!

டெல்லி: ஃபியூச்சர் ரீடெய்ல் - ரிலையன்ஸ் இடையிலான ஒப்பந்தத்துக்கு விதித்த தடையை சுப்ரீம்கோர்ட் நிறுத்தி வைத்துள்ளது. தீர்ப்பு, அமேசான் நிறுவனத்துக்கு சாதகமாக வந்ததை அடுத்து, ரிலையன்ஸ் மற்றும் ஃபியூச்சர் ரீடெய்ல் நிறுவனங்கள் இவ்விவகாரத்தில் பெரும் பின்னடவை சந்தித்துள்ளன. ஃபியூச்சர் ரீடெய்ல் வணிகங்களை 24 ஆயிரத்து 713 கோடி ரூபாய்க்கு வாங்குவது என  ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம், இணைப்பு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டது.

ஆனால், இந்த ஒப்பந்தத்துக்கு தடை விதிக்க வேண்டும் என  ஃபியூச்சர் குழுமத்தில் முதலீடுகளை மேற்கொண்டிருக்கும் அமேசான் நிறுவனம் உச்சநீதிமன்றத்திலும், சிங்கப்பூர் சர்வதேச நடுவர் மன்றத்திலும் வழக்கு தொடுத்தது. இதையடுத்து, சிங்கப்பூர் நடுவர் மன்றம், ரிலையன்ஸ் – ஃபியூச்சர் நிறுவன இணைப்பு ஒப்பந்தத்துக்கு தடை விதித்தது. ஃபியூச்சர் ரீடெய்ல் நிறுவனத்தின் முடிவை எதிர்த்து அமேசான் நிறுவனம் சமரச நீதிமன்றத்தை அணுகியது. மேலும் தனது நிறுவனத்துடன் ஃபியூச்சர் ரீடெய்ல் செய்த ஒப்பந்தத்தை மீறிவிட்டதாக அமேசான் நிறுவனம் குற்றம்சாட்டி இருந்தது.

தொடர்ந்து சிங்கப்பூர் சமரச நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தக்கோரி டெல்லி ஐகோர்ட்டை அமேசான் நிறுவனம் அணுகியது. அமேசான் மனுவை ஏற்ற டெல்லி ஐகோர்ட் ஃபியூச்சர் குழும நிறுவனங்கள் சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஃபியூச்சர் ரீடெய்ல் நிறுவனம் மேல்முறையீடு செய்தது. மேல்முறையீட்டை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, டெல்லி ஐகோர்ட் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. இதனால் அமேசான் நிறுவனத்திற்கு பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது.

Tags : Amazon ,Supreme Court , Future Retail, Reliance, Supreme Court
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...