4வது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றிக்கு முகமதுசிராஜும் காரணம்: இன்சமாம் உல் ஹக் பேட்டி

லாகூர்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையே நடந்த 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றியடைந்தது. இதுகுறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் இன்சமாம் உல் ஹக் கூறியதாவது:- நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு குறிப்பாக கடைசி நாளில் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் மிக சிறப்பாக கை கொடுத்தனர்.

உதாரணத்திற்கு முகமது சிராஜ் விக்கெட் கைப்பற்றவில்லை என்றாலும், அவர் பந்துவீசிய விதம் அபாரமாக இருந்தது.  விராட் கோலி அவரிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்பதை புரிந்துகொண்டு நடந்துகொண்டார். அவரது பந்துவீச்சும் வெற்றிக்கு காரணம்’’ என்றார்.

Related Stories:

>