“காசு பணம் துட்டு மணி…மணி” : சட்டப்பேரவையில் திமுக எம்.எல்.ஏ கலகல பேச்சு!

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று காவல்துறை கொள்கை விளக்கக்குறிப்பு வெளியிடப்பட்டது. அதில், தமிழ் நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது. பாலியல் வன்கொடுமை. வரதட்சணை மரணம். கணவர் மற்றும் அவரது உறவினர்களால் கொடுமைப் படுத்துதல் போன்ற குற்றங்களில் 2019ஆம் ஆண்டு முதல் 2021 ஜூன் வரை 4,967 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளததாக தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக அதிமுக எம்.எல்.ஏக்கள் கேள்விகளை முன்வைத்தனர்.

பின்னர் பேசிய திமுக உறுப்பினர் ஆற்காடு ஈஸ்வரப்பா, காவல்துறை என்பது நெருப்பு போன்றது என்றும் திமுக ஆட்சியில் திருவண்ணாமலை தீபமாக எரியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.சட்டத்தை மீறி அதிகாரத்தை பயன்படுத்தி சட்டத்தை வளைத்து காசு, பணம், துட்டு, மணி, மணி என பாட்டு பாடி கொண்டு இருந்தவர்கள் திமுக ஆட்சி அமைந்த பிறகு, குற்றம் புரிந்தவர் வாழ்க்கையில் நிம்மதி கொள்வது என்பது ஏது என பாடி கொண்டு இருப்பதாக ஈஸ்வரப்பா பாடியதால் அவை முழுவதும் சிரிப்பலை ஏற்பட்டது.

Related Stories:

More
>