×

செங்கல்பட்டு பயோடெக் நிறுவனத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு: கொரோனா தடுப்பூசி உற்பத்தியை தொடங்க நடவடிக்கை’ மத்திய அரசுக்கு முதல்வர் வலியுறுத்தல்

சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள எச்எல்எல் பயோடெக் நிறுவனத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது தடுப்பூசி உற்பத்தியை தொடங்குவதற்கான உரிய நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். செங்கல்பட்டு மாவட்டம்,  திருமணி கிராமத்தில், 2012ம் ஆண்டு  மத்திய அரசின் எச்பிஎல் நிறுவனம் மூலம் தடுப்பூசி உற்பத்தி தொழிற்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து 100 ஏக்கர் பரப்பளவில் 55,685 சதுர மீட்டர் பரப்பளவில் தடுப்பூசி தொழிற்சாலை அமைக்கப்பட்டது. இதில், தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி, ஹெபடைடிஸ் பி தடுப்பூசி, ஹீமோபிலஸ் இன்ஃப்ளூயன்ஸா வகை பி.ரேபிஸ் தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு உயிர் காக்கும் மருந்துகள் தயாரிக்கும் வகையில் உள்கட்டமைப்புகள் அமைக்கப்பட்டு அதற்கான ஆய்வுதளவாடங்கள் அனைத்தும் நிறுவப்பட்டு தடுப்பூசிகள் தயாரிக்கும் வைகையில் தயார் நிலையில் உள்ளது.இதில் பயோ டெக்னாலாஜி பயின்ற வல்லுநர்கள் உள்பட 200க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இத்திட்டத்துக்கு அங்கீகரிக்கப்பட்ட திட்டச்செலவு 594 கோடி என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், பல்வேறு காலதாமதத்தால் செலவு  904.33 கோடியாக உயர்ந்தது. இதற்கான அறிக்கையை 2018ம் ஆண்டு சமர்ப்பித்தது. ஆனால், நிதி அமைச்சகம் இந்த திட்டத்துக்கு ஒப்புதல் தரவில்லை. இந்நிலையில் கொரோனா காலத்தில் 51 ஆயிரத்து 647 கோடி நிதி ஒதுக்கி தனியாரிடம் தடுப்பூசி மருந்து வாங்கிய மத்திய அரசு கொரோனா ஆய்வுக்கும், தடுப்பூசி மருந்து தயாரிக்கவும் தயார் நிலையில் இருக்கும் எச்எல்எல் நிறுவனத்தில் உற்பத்தியை தொடங்குவதற்கு 310 கோடி நிதியை உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும். தனியார் நிறுவனங்களை ஊக்கப்படுத்த ₹10 ஆயிரத்து 55 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யும் அப்போதைய எடப்பாடி அரசு 100 கோடி ஒதுக்கி ஒருங்கிணைந்த தடுப்பூசி மையத்தினை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,எனவும் இந்த கம்பெனியை உடனடியாக திறக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தனர்.மேலும், திமுக எம்பிக்கள் தயாநிதி மாறன், செல்வம், மற்றும் பல்வேறு கட்சியினர் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து இந்நிறுவனம் செயல்பட வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து விளக்கி மனு கொடுத்துள்ளனர்.  இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திருமணியில் உள்ள தடுப்பூசி மையத்தை அதிகாரிகளுடன் சென்று ஒரு மணி நேரம் ஆய்வு முற்கொண்டார். பின்பு தடுப்பூசி மையத்தின் செயல்பாடுகள் அதன் முக்கியத்துவம் உற்பத்தி ஆகியவை குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். மேலும், கொரோனா தொற்றை  தடுப்பதற்கான தடுப்பூசிகளின் தேவை அதிகமாக இருப்பதை கருத்தில் கொண்டு, இந்த  நிறுவனத்தில் கொரோனா தடுப்பூசி உற்பத்தியை உடனடியாக தொடங்குவதற்கு அனைத்து  முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்காக தமிழ்நாடு அரசின் சார்பில்  தேவைப்படும் உதவிகள் வழங்கப்படும் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மேலும், மத்திய  அரசின் நிறுவனமான எச்எல்எல் பயோடெக் லிமிடெட் நிறுவனத்திற்கு உற்பத்தியை  தொடங்குவதற்கான உரிய நிதியை ஒதுக்கீடு செய்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர   மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். இந்த  ஆய்வு கூட்டத்தில், எச்எல்எல் பயோடெக் நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர்  விஜயன், தொழில் துறை முதன்மை செயலாளர் முருகானந்தம்,  செங்கல்பட்டு மாவட்ட  ஆட்சி தலைவர் ஜான் லூயிஸ் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்….

The post செங்கல்பட்டு பயோடெக் நிறுவனத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு: கொரோனா தடுப்பூசி உற்பத்தியை தொடங்க நடவடிக்கை’ மத்திய அரசுக்கு முதல்வர் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,Chengalpattu Biotech Company ,central ,Chennai ,Tamil Nadu ,M. K. Stalin ,HLL Biotech ,Chengalpattu district ,Chengalpattu Biotech ,Dinakaran ,
× RELATED முன்னாள் விமானப்படை வீரர் நிவாசன்...