கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளில் ஆப்கன் பெண்கள் பங்கேற்க கூடாது : தாலிபான்கள் அறிவிப்பு!

காபூல் : கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளில் ஆப்கான் பெண்கள் பங்கேற்க தாலிபான்கள் தடை விதித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த தாலிபான் அரசின் கலாச்சார ஆணையத் துணை தலைவர் அகமதுல்லா வாசிக், கிரிக்கெட் உள்ளிட்ட எந்த விளையாட்டு போட்டிகளிலும் ஆப்கன் நாட்டு பெண்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றார். பெண்களை கிரிக்கெட் விளையாட அனுமதித்தால் இஸ்லாமிய சட்டத்தின் ஆடை கட்டுப்பாடுகளை அவர்கள் மீறுவார்கள் என்பதால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது, இது ஊடக யுகம் என்பதால் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் தவிர்க்க முடியாதவை. அவற்றை மக்கள் பார்க்கிறார்கள்.இஸ்லாமும் இஸ்லாமிய எமிரேட்டும் பெண்களை கிரிக்கெட் விளையாட அனுமதிக்கவில்லை,என்றார். பெண்கள் உடல் வடிவத்தை வெளிப்படுத்தும் வகையிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதை இஸ்லாமிய சட்டம் அனுமதிக்காது என்றும் அகமதுல்லா குறிப்பிட்டுள்ளார். இதனிடையே தாலிபான் ஆட்சியாளர்கள் பெண்களை கிரிக்கெட் விளையாட அனுமதிக்காவிட்டால் ஆப்கான் ஆண்கள் அணிக்கு எதிராக திட்டமிடப்பட்டுள்ள டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை ரத்து செய்வதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

Related Stories:

>