கடந்த சட்டமன்ற தேர்தலில் சரியான வியூகம் வகுக்காததால் அதிமுக தோல்வி அடைந்தது : மாஜி அமைச்சர் சி.வி.சண்முகம் விரக்தி

விழுப்புரம்:கடந்த சட்டமன்ற தேர்தலில் சரியான வியூகங்களை வகுக்காததால் அதிமுக தோல்வி அடைந்ததாக cவிரக்தியுடன் பேசினார்.விழுப்புரம் அருகே கோலியனூரில் ஒன்றிய அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் பேசுகையில், விழுப்புரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக பகுதிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. தேர்தல் நடத்துவதாக ஒருபக்கம் அரசு அறிவித்தாலும், மற்றொருபக்கம் நீதிமன்றத்தில் தள்ளி வைக்க கோரி மனுதாக்கல் செய்துள்ளது. தேர்தலில் வெற்றி தோல்வி சகஜம். 10 ஆண்டு ஆட்சியிலிருந்த அதிமுக, தற்போது வலுவான எதிர்கட்சியாக இருக்கிறது.

72 எம்எல்ஏக்களை பெற்றிருக்கிறோம். வெறும் 90 ஆயிரம் வாக்குகளை பெறாததால் 45 இடங்களை நாம் இழந்திருக்கிறோம். அந்த இடங்களில் வெற்றி பெற்றிருந்தால் 125க்கும் அதிமான இடங்களில் நாம் வெற்றி பெற்று ஆட்சியில் இருந்திருப்போம். கடந்த சட்டமன்ற தேர்தலில், சரியான தேர்தல் வியூகங்களை வகுக்காததால் தோல்வியடைந்துள்ளோம். தற்போது அதிமுக என்ற மாபெரும் இயக்கம், 50ம் ஆண்டில் அடியெடுத்து வைக்க போகிறது. கடந்த 1972ம் ஆண்டு எம்ஜிஆர் கட்சியை ஆரம்பித்ததில் இருந்து 49 ஆண்டுகளில் 32 ஆண்டுகள் நாம் ஆட்சியில் இருந்திருக்கிறோம். வேறு எந்தகட்சியும் இருந்தது கிடையாது. வெற்றி, தோல்வி என்பது சகஜம்தான். தற்போது, நாம் தோல்வியை தழுவியுள்ளதால் துவண்டு விடக்கூடாது. அடுத்து, மிகப்பெரிய வெற்றி நமக்கு காத்து கொண்டிருக்கிறது’ என்றார்.

Related Stories: