ஊட்டி நகராட்சி, ஒன்றிய பகுதிகளில் ரூ.72.78 லட்சத்தில் கம்பிவலை தடுப்புச்சுவர்: கலெக்டர் ஆய்வு

ஊட்டி: ஊட்டி நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் எஸ்ஏடிபி., திட்டத்தின் கீழ் ரூ.72.78 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட கம்பி வலை தடுப்புச்சுவர் பணிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார்.சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வேளாண் பொறியியல் துறை சார்பில் ஊட்டி நகராட்சிக்குட்பட்ட தலைக்குந்தா பகுதியில் ரூ.7.36 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட கம்பி வலை தடுப்புச்சுவர், ரூ.8.96 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட தடுப்புச்சுவர், ரூ.6.28 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட கான்கீரிட் தடுப்புச்சுவர், சோலூர் பேரூராட்சியில் கல்லட்டி முதல் தட்டனேரி சாலை நிலச்சரிவு பாதிப்பு ஏற்படாமல் இருக்க 5 இடங்களில் ரூ.34.61 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட கம்பி வலை சுற்றுச்சுவர் பணி ஆகியவற்றை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், உல்லத்தி ஊராட்சிக்குட்பட்ட ரூ.7.50 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட ஓடைக்கரை கம்பிவலை தடுப்புச்சுவர் பணி என மொத்தம் ரூ.72.28 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி பணிகளை பார்வையிட்டார்.இந்த ஆய்வின் போது வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் ெஜயபிரகாஷ், சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்ட பொறியாளர் குமார், உதவி பொறியாளர்கள் ராதாகிருஷ்ணன், குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

More
>