தாவரவியல் பூங்கா வளாகத்தில் ராட்சத மரம் விழுந்து தடுப்புச்சுவர் சேதம்

ஊட்டி: பலத்த காற்றுடன் பெய்த சாரல் மழை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் ராட்சத கற்பூர மரம் விழுந்ததில் தடுப்புச்சுவர் சேதமடைந்தது.நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ காற்றின் காரணமாக கடந்த சில நாட்களாக பலத்த காற்றுடன் லேசான சாரல் மழை பெய்து வருகிறது. இதனால், கடும் குளிர் நிலவி வருகிறது. குளிரால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் பலத்த காற்று வீசி வரும் நிலையில் ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் சில இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்துள்ளன. இவை உடனுக்குடன் வெட்டி அகற்றப்பட்டன.

இந்நிலையில், ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா வளாகத்தில் அலங்கார மாடத்திற்கு பின்புறம் சுற்றுச்சுவரை ஒட்டி வளர்ந்திருந்த ராட்சத கற்பூர மரம் நேற்று முன்தினம் மாலை பலத்த காற்று பூங்காவிற்குள் ஓடையின் குறுக்காக விழுந்தது. இதனால், அங்குள்ள அலங்கார மரம் முழுவதுமாக சேதமடைந்ததுடன், சுற்றுச்சுவரும் சேதமடைந்தது. நேற்று காலை பூங்கா ஊழியர்கள் மரத்ைத வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

Related Stories:

More
>