×

கம்பம் பகுதியில் வீரிய ஒட்டுரக பப்பாளி சாகுபடி ‘ஜோரு’

கம்பம்: வீரிய ஒட்டுரக பப்பாளி சாகுபடியில், விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைப்பதால் கம்பம் பகுதி விவசாயிகள் பப்பாளி சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.சர்க்கரை நோய் மற்றும் வயிறு சம்மந்தமான நோய்களை, குணப்படுத்தக்கூடிய, மருத்துவ குணம் உள்ள பப்பாளி பழத்துக்கு பொதுமக்களிடையே வரவேற்பு உள்ளது. இதன் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கூடலூர், கம்பம், சுருளிப்பட்டி பகுதியில், நெல், வாழை, திராட்சை, மா மற்றும் காய்கறிகளுக்கு அடுத்தபடியாக விவசாயிகள் வீரிய ஒட்டுரக பப்பாளி சாகுபடி செய்து வருகின்றனர். குறைந்த அளவு தண்ணீரே தேவைப்படுவதால் சொட்டுநீர் பாசனம் மூலம் செடி வளர்க்கப்படுகிறது.

பப்பாளி சாகுபடியில் கூலி ஆட்களின் தேவை குறைவு என்பதாலும், இது விவசாயிகளுக்கு சாதகமாக அமைந்துள்ளது. நடவு செய்த நாளிலிருந்து, ஆறு மாதங்களில் பலன் தரும் இந்த வீரிய ஒட்டுரக பப்பாளி, ஏக்கருக்கு ஆயிரம் செடிகள்வரை நட்டு வளர்க்கின்றனர். ஒரு ஏக்கரில் வாரத்துக்கு ஒருமுறை சுமார் 2 டன் பப்பாளி வரை உற்பத்தியாகிறது. மொத்த வியாபாரிகள், தோட்டங்களுக்கு வந்து பப்பாளி காய்களை விலைக்கு எடுத்து செல்கின்றனர். மேலும் இங்கு அறுவடை செய்யப்படும் பப்பாளிகள், ஜூஸ் சென்டர்களுக்கும், கேரள மாநிலத்துக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. செடிகளை பராமரிக்கும் முறையைப் பொறுத்து, வீரிய ஒட்டுரக பப்பாளி சாகுபடியில் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கிறது. இதனால் இப்பகுதியில் பல விவசாயிகள் தற்போத பப்பாளி சாகுபடிக்கு மாறி உள்ளனர்.

Tags : Kambam , Active grafted papaya cultivation in Jharkhand
× RELATED காளான் வளர்ப்பு குறித்து கம்பம் பகுதி விவசாயிகளுக்கு விளக்கம்