திருச்சி- கரூர் புறவழிச்சாலையில் அதிவேகமாக செல்லும் வாகனங்கள் தானியங்கி கேமரா மூலம் கண்காணிப்பு

குளித்தலை: திருச்சி கரூர் தேசிய புறவழிச்சாலையில் அதிவேகமாக வரும் வாகனங்களை வேகத்தை கட்டுப்படுத்தவும் விபத்துக்களை தவிர்க்கவும் குளித்தலை போக்குவரத்து போலீசார் புதிதாக தானியங்கி கேமராவை வைத்து கண்காணித்து வருகின்றனர். இதுகுறித்து குளித்தலை போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் நாவுக்கரசரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்களை குறைக்க கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக செல்லும் வாகனங்களை தானியங்கி கேமரா மூலம் கண்காணித்து போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து வருகின்றனர்.

அவ்வாறு வழக்கு பதிவு செய்யப்படும் வாகன ஓட்டுநர்களின் உரிமம் ரத்து செய்யப்படும்.மேலும் வரும் காலங்களில் கரூர் மாவட்டத்தில் அனைத்து தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் காவல்துறை மற்றும் போக்குவரத்து காவல்துறை சார்பில் தினந்தோறும் ஆங்காங்கே இந்த வாகன சோதனை நடைபெறும். அதனால் வாகன ஓட்டிகள் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் செல்லும் போது மிக கவனத்துடனும் வேகத்தை குறைத்து விபத்தை தவிர்த்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் எனக் கூறினார்.

Related Stories:

>