×

எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்லூரியில் 300 பேருக்கு இலவச உயர்கல்வி: பாரிவேந்தர் எம்பி பேட்டி

சென்னை: பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில், உயர்கல்வி பயில தகுதி இருந்தும் குடும்ப பொருளாதார சூழ்நிலையால், கல்லூரியில் சேரமுடியாமல் உள்ள ஏழை குடும்பத்தை சேர்ந்த 300 மாணவ, மாணவிகள் எஸ்ஆர்எம் கல்லூரியில் (SRMIST SRM Institute of Science and Technology) இலவச உயர்கல்வி படிக்க இந்தாண்டு, வழக்கம்போல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை தொகுதி மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என பெரம்பலூர் தொகுதி எம்பியும், எஸ்ஆர்எம் கல்வி குழும வேந்தருமான டாக்டர் டி.ஆர்.பாரிவேந்தர் தெரிவித்தார். இதுகுறித்து அவர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி.

பெரம்பலூர் தொகுதியில் உள்ள குளித்தலை, லால்குடி, மணச்சநல்லூர், முசிறி, பெரம்பலூர், துறையூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில், பொருளாதாரத்தில் நலிவடைந்த குடும்பத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் 300 பேருக்கு எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில்  பொறியியல், கலை, அறிவியல், வேளாண்மை அறிவியல், மேலாண்மை, பாரா மெடிக்கல் உள்பட பல்வேறு உயர்கல்வி பயில இலவச முழு கல்வி கட்டணம் உணவு மற்றும் விடுதி வசதியுடன் படிப்பதற்காக வாய்ப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. என்றார். பேட்டியின்போது, எஸ்ஆர்எம் துணைவேந்தர் முனைவர் சி.முத்தமிழ்ச்செல்வன், பதிவாளர் முனைவர் எஸ்.பொன்னுசாமி, சேர்க்கை இயக்குனர் முனைவர் கே.எஸ்.லட்சுமி, கம்யூனிகேசன் இயக்குனர் ஆர்.நந்தகுமார் ஆகியோர் இருந்தனர்.

Tags : SRM College of Science ,Parivendar , SRM College of Science and Technology, Free Higher Education, Parivendar MP
× RELATED லால்குடி அருகே பாரிவேந்தரின் இந்திய...