×

வானகரம் மீன் மார்க்கெட்டில் 15 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்

பூந்தமல்லி: வானகரம் மீன் மார்க்கெட்டில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ஜெகதீஷ் சந்திரபோஸ் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள், திருவேற்காடு நகராட்சி அதிகாரிகள் ஆகியோர் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, மீன் மார்க்கெட்டில் உள்ள 81 கடைகளிலும் சோதனை செய்தனர். இதில் பார்மலின் ரசாயனம் தடவிய மீன்கள் ஏதும் இல்லை என்று தெரியவந்தது. மேலும் 15 கிலோ கெட்டுப்போன மீன்களை மட்டும் பறிமுதல் செய்து அவற்றை முற்றிலுமாக அழித்தனர். ரசாயனம் கலந்த மீன்கள் எப்படி இருக்கும், கெட்டுப்போன மீன்கள் எப்படி இருக்கும் என்று அங்கு மீன் வாங்க வந்த மக்களுக்கு விளக்கி கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பார்மலின் போன்ற ரசாயனம் தடவிய மீன்களை உண்பதால் பல்வேறு நோய்கள் ஏற்படுவதுடன் புற்று நோய் தாக்கும் அபாயம் இருப்பதாகவும் கூறினர்.


Tags : Fish market, spoiled fish, confiscated
× RELATED சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு...