×

திரிபுராவில் பாஜக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்தொண்டர்கள் இடையே மோதல் :சிபிஎம் கட்சி அலுவலகங்களை பாஜகவினர் எரித்ததால் பதற்றம்!!

திரிபுரா : திரிபுரா மாநிலத்தில் பாஜக கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் இடையே மோதல் உச்சம் அடைந்துள்ளது.தலைநகர் அகர்தலா உள்ளிட்ட 2 இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகங்களை பாஜகவினர் எரித்ததால் பதற்றம் நிலவுகிறது. திரிபுராவில் ஆட்சியை தக்க வைத்து கொள்ள பாஜக கட்சியைச் சேர்ந்த முதல்வர் பிப்லாப் குமார் தேப் தீவிரம் காட்டி வருகிறார்.2 நாட்களுக்கு முன்பு Sepahijala மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் கூட்டங்களை நடத்தினார்.அப்போது 2 இடங்களில் பாஜக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையே மோதல் வெடித்தது.

இதன் தொடர்ச்சியாக அகர்தலா உள்ளிட்ட பல இடங்களில் பாஜகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டி ஊர்வலங்களை நடத்தினர்.அப்போது 2 கட்சியினர் இடையே மோதல் வெடித்தது.அகர்தலாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு தீ வைக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. வாகனங்களும் தீ வைத்து எரிக்கப்பட்டன. மோதல் நடந்த இடங்களில் போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனர்.தடியடி நடத்தினால் சம்பவ இடங்கள் போர்க்களம் போன்று காட்சி அளித்தனர்.2022ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் திரிபுராவில் ஆட்சியை பிடிக்க திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் குறி வைத்துள்ளது. அக்கட்சி நிர்வாகிகள் திரிபுரா சென்று உள்ளூர் தொண்டர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அண்மையில் திரிணாமுல் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அபிஷேக் பேனர்ஜி திரிபுரா சென்ற போது, அவரது வாகனத்தை பாஜக தொண்டர்கள் கற்கள் மற்றும் கம்புகளை கொண்டு தாக்கியது குறிப்பிடத்தக்கது.   


Tags : BJP ,Marxist ,Tripura ,CPM , திரிபுரா
× RELATED மேற்கு திரிபுரா தொகுதி தேர்தலை ரத்து செய்க: மார்க்சிஸ்ட் கோரிக்கை