×

ஆப்கானில் தாலிபான்கள் ஆட்சி எதிரொலி!: தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யாவுடன் இந்தியா ஆலோசனை..!!

டெல்லி: ஆப்கானிஸ்தானில் தீவிரவாத அமைப்பான தாலிபான் ஆட்சியை கைப்பற்றியிருக்கும் நிலையில், பிராந்திய பாதுகாப்பு, தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா ஆகிய நாடுகளின் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை அதிகாரிகளுடன் இந்தியா ஆலோசனை நடத்தி வருகிறது. ஆப்கானிஸ்தானை கைப்பற்றி தாலிபான்கள் அமைத்துள்ள அரசு பற்றி பிற நாடுகளின் நிலைப்பாடு என்ன என்பதை இந்தியா உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. தேசிய பாதுகாப்பு செயலர் அஜித் தோவல், பிற நாடுகளின் பிரதிநிதிகளுடன் பாதுகாப்பு தொடர்பாக ஆலோசித்து வருகிறார்.

அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ.வின் இயக்குனர் வில்லியம் பர்ன்ஸை சந்தித்து அஜித் தோவல் ஆலோசனை நடத்தியுள்ளார். டெல்லியில் தோவலை சந்தித்த பிறகு ஆப்கானிஸ்தான் தொடர்பாக பிற நாடுகளுடனும் பர்ன்ஸ் ஆலோசித்து வருகிறார். டெல்லியில் ரஷ்ய தேசிய பாதுகாப்பு செயலர் நிகோலாய் பட்ருஷேவையும் தோவல் சந்தித்து பேசினார். ஏற்கனவே பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் உடன் ஆலோசனை நடத்தி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரும், மூத்த அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். ஆப்கானிஸ்தானில் புதிதாக அமைந்துள்ள தாலிபான்கள் அரசு குறித்து இந்தியா தனது நிலைப்பாட்டை தெரிவிக்காத நிலையில், பாதுகாப்பு மற்றும் வெளியுறவு தொடர்பாக அடுத்தடுத்து தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.


Tags : Taliban ,Afghan ,India ,United States ,Britain ,Russia , Afghan, Taliban regime, US, India consult
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!