×

பொதுமக்கள் ரத்தம் சிந்தும் நிலை முடிவுக்கு வந்துவிட்டது... ஆப்கானியர்கள் அனைவரும் சொந்த நாட்டிற்கு திரும்புங்கள் : தாலிபான்கள் அறிவிப்பு!!

காபூல் : முன்னாள் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி அரசாங்கத்தில் பணியாற்றிய அதிகாரிகள் அனைவரும் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என புதிய ஆப்கன் பிரதமர் முல்லா முகமது ஹசன் அகுந்த் அறிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள ஆப்கன் பிரதமர் முகமது ஹசன் அகுந்த், நாட்டில் சரிந்து கிடைக்கும் நிர்வாகத்தை சீரமைக்க தமது அரசு முக்கியத்துவம் அளித்து வருவதாக தெரிவித்தார். தாலிபான்கள் மீதான அச்சம் காரணமாக முந்தைய அரசில் பணியாற்றிய அதிகாரிகள் பணிக்கு திரும்ப தயங்குவதாக தெரிவித்த அவர், ஊழியர்கள் யாரும் அச்சம் அடைய தேவையில்லை என்று கூறினார்.

அமெரிக்கா மற்றும் நாட்டோ படைகளுக்கு உதவிய அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படும் என்றும் தாலிபான்கள் அளித்துள்ள உறுதி மொழியை அவர் சுட்டிக் காட்டியுள்ளார். நாட்டை விட்டு வெளியேறிய ஆப்கானியர்களும் ஆப்கானிஸ்தானுக்கு திரும்ப வேண்டும் என்று பிரதமர் அகுந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆப்கானில் நல்லாட்சியை ஏற்படுத்த தாலிபான் அமைப்பு பெருமளவு பொருள் மற்றும் உயிர் சேதங்களை சந்தித்து இருப்பதாக கூறிய அவர், பொதுமக்கள் ரத்தம் சிந்தும் நிலை முடிவுக்கு வந்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.இதனிடையே காபூலில் உள்ள முன்னாள் அமெரிக்க தூதரகத்தை கைப்பற்றியுள்ள தாலிபான்கள், அதில் சுற்றுசுவர்களில் தாலிபான் அமைப்பின் கோடியை பிரம்மாண்டமாக வரைந்துள்ளனர்.சுவர் முழுவதும் ஆக்கிரமிப்பு முடிந்தது விடுதலை பிறந்தது என்று மீண்டும் மீட்கப்பட்ட ஆப்கானிஸ்தான் போன்ற வாசகங்களை தாலிபான்கள் எழுதி உள்ளனர்.


Tags : Afghans ,Talibans , ஆப்கானியர்கள்,தாலிபான்கள்
× RELATED 3 லட்சம் பேர் வெளியேற்றப்பட்ட நிலையில்...