×

மயிலாடுதுறை அருகே குழந்தை பேறு வேண்டி மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை!: தொட்டில் கட்டி பெண்கள் வழிபாடு..!!

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே குழந்தை பேறு வேண்டி  மாரியம்மன் கோயிலில் அசைவ உணவை படையலிட்டு அதனை பெண்கள் சாப்பிடும் விழா 2 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் நடைபெற்றது. மயிலாடுதுறை அடுத்த இலுப்பைதோப்பில் உள்ளது பழமை வாய்ந்த சின்ன மாரியம்மன் ஆலயம். இங்குள்ள பேச்சியம்மனுக்கு அசைவ உணவு, இனிப்பு, பழங்களை படையலிட்டு அதனை பெண்கள் சாப்பிட்டால் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

மேலும் அம்மன் சன்னதியில் குழந்தை வரம் வேண்டி தொட்டில் கட்டி பெண்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். கொரோனா பெருந்தொற்றில் இருந்து உலக மக்கள் விடுபட வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. குழந்தை வரம் வேண்டி நடைபெற்ற இந்த திருவிழாவில் மயிலாடுதுறை சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்துக்கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.


Tags : Maryamman ,Mayaladu , Mayiladuthurai, Childbirth, Mariamman Temple, Pooja
× RELATED எசனை காட்டு மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா