×

கொருக்குப்பேட்டை - எண்ணூர் இடையே 4வது ரயில்பாதை திட்டம்: அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்

சென்னை: சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட போக்குவரத்துத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியிருப்பதாவது: சென்னை கடற்கரை - கொருக்குப்பேட்டை இடையே 3வது மற்றும் 4வது புதிய ரயில் பாதை சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் வழியாக செல்கிறது. இது சென்னை கடற்கரை மற்றும் கும்மிடிப்பூண்டி இடையே புறநகர் ரயில் பயணிகளின் சேவைக்காக அமைக்கப்பட்டுள்ளது. 506 ச.மீ நிலப்பரப்பை கையகப்படுத்த அரசு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, இழப்பீட்டுத் தொகை வழங்கும் நிலையில் உள்ளது.

கொருக்குப்பேட்டை முதல் எண்ணூர் வரை 4வது ரயில் பாதை அமைப்பதற்காக 12516 ச.மீ நிலத்தை கையக்கப்படுத்த தெற்கு ரயில்வே துறையில் நிலத் திட்ட அட்டவணை சமர்பிக்கப்படிருந்தது. ஆனால் இப்போது திருத்தப்பட்ட நிலத் திட்ட அட்டணை 12629 ச.மீ பரப்பளவில் பெறப்பட்டு, நிர்வாக ஒப்புதல் வழங்குவதற்கான நடவடிக்கை பரிசீலனையில் உள்ளது. கொருக்குப்பேட்டை - எண்ணூர் இடையே 3வது மற்றும் 4வது ரயில் பாதை அமைக்கும் திட்டத்திற்காக 2429 ச.மீ நிலப்பரப்பை கையகப்படுத்த அரசு நிர்வாக ஒப்புதல் வழங்கியுள்ளது. என்றார்.

Tags : Korukkatta ,Countur ,Minister , Korukkupettai, Ennore, Railway Project, Minister Rajakannappan
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...