×

ஐகோர்ட் உத்தரவு மனித கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்த கூடாது

சென்னை: மாநகராட்சி, நகராட்சி ஆணையர்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட  பகுதிகளில் கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்துவதில்லை என்பதை உறுதி  செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பாதாளச்  சாக்கடைகள், கழிவுநீர் தொட்டிகள் சுத்தம் செய்வதில் மனிதர்களை  பயன்படுத்த கூடாது, விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்கள் நிவாரணம் பெறுவதை  உறுதி செய்ய வேண்டும் எனக்கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள்  தொடரப்பட்டுள்ளன.  இந்நிலையில் வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு  வந்தது.

அப்போது, அரசு தரப்பில் ஆஜரான அரசு பிளீடர் பி.முத்துக்குமார்,  தற்போது இந்த பணியில் ஒருவரையும் ஈடுபடுத்துவதில்லை. கழிவுகளை அகற்றுவதில்  இயந்திரங்கள் தான் பயன்படுத்தப்படுகிறது என்றார்.  இதை பதிவு செய்து  கொண்ட நீதிபதிகள், தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி ஆணையர்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மனித கழிவுகளை அகற்ற மனிதர்களை  பயன்படுத்துவதில்லை என்ற உறுதிமொழியை அளிக்க வேண்டும். இதை உறுதி செய்ய  வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 6 வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.

Tags : Icourt , ICord, human waste, should not be used by humans
× RELATED வேட்புமனு நிராகரிப்பு வழக்கு: ஐகோர்ட் மறுப்பு