சதுர்த்தியை வீட்டில் கொண்டாடுங்கள் விநாயகரை வைத்து அரசியல் வேண்டாம்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி

சென்னை: சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் வளாகத்தில் தமிழகம் முழுவதும் உள்ள இந்து சமய அறநிலையத்துறைகளுக்கு சொந்தமான நிலங்கள் நவீன ரோவர் உபகரணங்களை பயன்படுத்தி அளவீடு செய்யப்படும் பணிகள்  துவக்க நிகழ்ச்சியை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு  துவக்கி வைத்தார். இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த.வேலு, திருக்கோயில் தனி  அலுவலர்-மாவட்ட வருவாய் அலுவலர் (கோயில் நிலங்கள்) சுகுமார், இணை  ஆணையர் காவேரி ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் திருக்கோயில்களுக்கு சொந்தமான 4.78 லட்சம் ஏக்கர் நிலங்கள் சி.ஒ.ஆர்.எஸ் நிலையங்கள் மூலம் ரோவர் கருவிகள் மூலம் கொண்டு அளவிடப்பட உள்ளன.  கபாலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான 61.99 ஏக்கர் கோயில் நிலம் அளவிடப்பட உள்ளது. மதத்தை வைத்து பாஜ அரசியல் செய்கிறது. வீட்டில் இருந்து விநாயகர் சதுர்த்தி கொண்டாடுங்கள். விநாயகரை வைத்து அரசியல் செய்யாதீர்கள். ஒன்றிய அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை கடுமையாக தமிழகம் கடைபிடிக்கிறது.

Related Stories:

More
>