×

மதம் மாறிய தலித் கிறிஸ்தவர்களுக்கு சலுகை மறுப்பு கிறிஸ்தவ ஆலயம், பள்ளிவாசல் கட்ட அனுமதிக்க வேண்டும்: திமுக எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் பேச்சு

சென்னை:தமிழக சட்டப் பேரவையில் நேற்று ஆதிதிராவிடர், சிறுபான்மையினர் நலன் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆகிய மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு திருச்சி மத்திய தொகுதி உறுப்பினர் இனிகோ இருதயராஜ் (திமுக) பேசியதாவது:   மதம் மாறிய தலித் கிறிஸ்தவர்களுக்கு தொடர்ந்து சலுகைகள் மறுக்கப்பட்டு வருகின்றன. தலித் கிறிஸ்தவர்கள் பட்டியலிடப்பட வேண்டும். இதற்காக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் 5 ஏக்கரில் ஒரு கல்லறைத் தோட்டம் உருவாக்கித் தர வேண்டும். கிறிஸ்தவர்கள் ஆலயம் கட்டவும், இஸ்லாமியர்கள் பள்ளிவாசல் கட்டவும் தற்போது உரிய காரணங்கள் இன்றி அனுமதி தரப்படுவதில்லை. அரசு இதற்கு அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Christians ,Christian ,DMK ,MLA ,Iniko Iruthayaraj , Religion, Dalit Christianity, Denial of Privilege, Christian Church, Mosque
× RELATED கோயில் கும்பாபிஷேகத்திற்கு பூஜை...