×

பேரவையில் அதிமுக, திமுக காரசார விவாதம் சிஏஏ ரத்து தீர்மானத்தை அதிமுக ஆதரிக்கிறதா, எதிர்க்கிறதா?

சென்னை:  சட்டப்பேரவையில் போக்குவரத்துறை மீதான மானியக்கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது, அரசு தலைமை கொறடா கோவி.செழியன் பேசுகையில், ‘‘குடியுரிமை திருத்த சட்டத்தை (சிஏஏ) ரத்து செய்ய வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அதிமுக இந்த தீர்மானம் நிறைவேற்றப்படும் போது வெளிநடப்பு செய்தது. அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி : வெளிநடப்பு செய்வது எங்களின் உரிமை. ஜெயலலிதாவின் பெயர் புறக்கணிக்கப்பட்டது.  உயர்கல்விமன்ற வளாகத்தில் ஜெயலலிதா சிலைக்கு கூட மாலை அணிவிக்க முடியவில்லை. அதற்காக தான் வெளிநடப்பு செய்தோம்.  அமைச்சர் செஞ்சி மஸ்தான் : காலையில் சிஏஏ தீர்மானத்தின் போது வெளிநடப்பு செய்து விட்டீர்கள். இப்போது கூறுங்கள், இந்த தீர்மானத்தை ஆதரிக்கிறீர்களா? இல்லையா?.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி : நான் முதலமைச்சராக இருக்கும் வரை சிறுபான்மையினருக்கு எந்த பாதிப்பும் வராது என்பதை எதிர்கட்சி தலைவர் முதல்வராக இருக்கும் போதே தெரிவித்திருக்கிறார். சிஏஏ சட்டம் கொண்டு வரும் போது எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று உள்துறை அமைச்சரை சந்தித்து பேசினார். அப்போது, இந்த சட்டத்தால் சிறுபான்மையினருக்கு எந்த வித பாதிப்பும் இல்லை என்பது ெதரிந்து கொண்ட பிறகே தமிழகம் வந்தார். அதிமுக எப்போதுமே சிறுபான்மையினருக்கு ஆதரவான நிலைப்பாடை தான் கொண்டுள்ளது.

அமைச்சர் செஞ்சி மஸ்தான் : குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் நீங்கள் வாக்களிக்க போய் தான் இந்த பிரச்சனையே வந்தது. பாபர் மசூதி இடிப்பிற்கு இங்கிருந்து கல் அனுப்பியது யார் என்பது அனைவருக்கும் தெரியும். அமைச்சர் துரைமுருகன் : இந்த விவகாரம் குறித்து பேசினால், நீண்டே கொண்டு சென்று விடும். இதனையடுத்து பேசிய சபாநாயகர் அப்பாவு இந்த விவாதத்தை இத்தோடு முடித்துக்கொள்ளலாம் என தெரிவித்ததையடுத்து விவாதம் முடிவுக்கு வந்தது.

Tags : AIADMK ,CAA , Assembly, AIADMK, DMK, CAA
× RELATED சிஏஏ சட்டத்திற்கு இபிஎஸ்சுக்கு தெரியாமல் ஓபிஎஸ் ஆதரவு அளித்தார்