×

தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: அமைச்சர் சிவசங்கர் தகவல்

சென்னை: சட்டப்பேரவையில் நேற்று பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் தாக்கல் செய்த கொள்கை விளக்க புத்தகத்தில் அமைச்சர் சிவசங்கர் கூறி இருப்பதாவது: ஒன்றிய அரசு பணிகளில் நியமனங்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்திய அரசமைப்பு சட்டத்தில் தனியார் நிறுவனங்களில் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து எதுவும் குறிப்பிட்டவில்லை. தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் பெருகி வருகின்றன. அரசு தனியார் நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமாக வரிச்சலுகை போன்று பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.

இந்த பலன்கள் பிற்படுத்தப்பட்ட, ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு சென்றடையும் விதத்தில் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு அவசியம். இந்திய அரசமைப்பு சட்டத்தில் தகுந்த திருத்தம் கொண்டு வந்தால் மட்டுமே தனியார் துறையிலும் இடஒதுக்கீடு வழங்க இயலும். எனவே இதற்கு தேவையான அரசமைப்பு சட்டதிருத்தம் கொண்டு வர இந்த அரசு ஒன்றிய அரசை வலியுறுத்தும். அனைத்து சமுதாய மக்களின் நீண்டநாள் கோரிக்கையான முழுமையான சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பினை தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து நடத்திட அரசு ஒன்றிய அரசை தொடர்ந்து வலியுறுத்தும்.

Tags : Chatiwari Census Census ,National Census ,Minister Shivangar , National Census, Sativari Census, Minister Sivasankar,
× RELATED தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு...