×

5 மாநில சட்டப்பேரவை தேர்தல் பாஜ பொறுப்பாளர்கள் நியமனம்: உபி., பஞ்சாப்பில் கூடுதல் முக்கியத்துவம்

புதுடெல்லி: அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள 5 மாநிலங்களுக்கான தேர்தல் பொறுப்பாளர்களை பாஜ நியமித்துள்ளது. உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், மணிப்பூர் மற்றும் கோவா மாநிலங்களில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தலைமை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. மேலும், கட்சிகளும் இதை சந்திக்க இப்போதே தயாராகி வருகின்றன. இந்நிலையில், இத்தேர்தலை சந்திப்பதற்கான ஒன்றிய அமைச்சர்களையும், முக்கிய நிர்வாகிகளையும் தேர்தல் பொறுப்பாளர்களை பாஜ நியமித்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநில தேர்தல் பொறுப்பாளராக ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், இணை பொறுப்பாளராக ஒன்றிய அமைச்சர் அனுராக் தக்கூர் உள்ளிட்ட 6 பேரும், பஞ்சாப் மாநில தேர்தல் பொறுப்பாளராக ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், இணை பொறுப்பாளராக ஒன்றிய அமைச்சர்கள் ஹர்தீப் சிங் புரி, மீனாக்‌ஷி லேகி உள்ளிட்ட மூன்று பேரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். உத்தரகாண்ட் மாநில தேர்தல் பொறுப்பாளராக ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, இணை பொறுப்பாளராக ஒன்றிய இணையமைச்சர் லொகெத் சாட்டர்ஜி உள்ளிட்ட 2 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மணிப்பூர் மாநில தேர்தல் பொறுப்பாளராக பூபேந்தர் யாதவ், இணை பொறுப்பாளராக பிரத்திமா போமிக் உள்ளிட்ட 2 பேரும், கோவா மாநில தேர்தல் பொறுப்பாளராக தேவேந்திர பாட்னவிஸ் தலைமையில் ஒன்றிய அமைச்சர் கிஷன் ரெட்டி உள்ளிட்ட 2 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேசம், பஞ்சாப் மாநில தேர்தல் அதிக கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், இந்த 2 மாநிலங்களில் மட்டும் கூடுதலாக ஒன்றிய அமைச்சர்களை தேர்தல் பொறுப்பாளராக பாஜ நியமித்துள்ளது.

Tags : Punjab , Legislative Elections, Appointment of BJP Officers, UP, Punjab
× RELATED பஞ்சாப் – அரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம்: 53 ரயில்கள் ரத்து