×

மலையிலிருந்து தவறி விழுந்த கேமராமேனை காப்பாற்ற முயன்ற ரஷ்ய அமைச்சர் பலி

மாஸ்கோ: ரஷ்யாவில் பேரிடர் பயிற்சில் அதனை படம்பிடித்த புகைப்பட பத்திரிகையாளர் மலை உச்சியில் இருந்து தவறி விழும்போது அவரை காப்பாற்ற அங்கிருந்து குதித்த ரஷ்ய பேரிடர் துறை அமைச்சர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ரஷ்ய அவசரகால அமைச்சர் எவ்ஜெனி ஜினிசெவ் தலைமையில் பனி நிறைந்த ஆர்டிக் பகுதியில் கடந்த 2 நாட்களாக பேரிடர் பயிற்சி நடந்து வந்தது. இந்த நிகழ்ச்சியின் புகைப்படங்கள் பல்வேறு ஊடகங்களில் செய்தியாக வெளியிடப்பட்டு வந்தன. இதில் 6,000 பேர் பங்கேற்றனர்.  இதன் ஒருபகுதியாக கிராஸ்நோயர்ஸ்க் மாகாணத்தின் நாரில்ஸ்க் நகரில் நேற்று பயிற்சி நடந்தது.

அப்போது பயிற்சி ஒத்திகையை புகைப்படம் எடுத்து கொண்டிருந்த புகைப்பட பத்திரிகையாளர் கால் தவறி மலை உச்சியிலிருந்து விழுந்தார். உடனடியாக அவரைக் காப்பாற்றும் முயற்சியில் மலை உச்சியிலிருந்து தண்ணீரில் குதித்த அமைச்சர் எவ்ஜெனி உயிரிழந்தார். இது குறித்து அரசு நிதி உதவியுடன் செயல்படும் ரஷ்யா டைம்ஸ் பத்திரிகையின் தலைமை செய்தி ஆசிரியர் மார்கரீட்டா சிமோன்யான் தனது டிவிட்டரில், ``தண்ணீரில் வெளியே நீட்டிக் கொண்டிருந்த கூரிய முனை கொண்ட பாறையில் தலை மோதியதில் அமைச்சர் எவ்ஜெனி உயிரிழந்தார்,’’என்று பதிவிட்டுள்ளார்.


Tags : Mountain, Cameraman, Russian Minister
× RELATED கனமழை காரணமாக துபாய், ஷார்ஜா சாலைகளில் வெள்ளப்பெருக்கு!