×

மேற்கு வங்கத்தில் பாஜ எம்பி வீட்டின் மீது வெடிகுண்டு தாக்குதல்

கொல்கத்தா:  மேற்கு வங்கத்தில் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் இருந்தே திரிணாமுல் காங்கிரஸ் - பாஜ இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்நிலையில், மேற்கு வங்கத்தை சேர்ந்த பாஜ எம்பி அர்ஜுன் சிங் வீட்டின் மீது மர்ம நபர்கள் நேற்று முன்தினம் அதிகாலை மூன்று நாட்டு வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.வடக்கு 24 பர்கானா மாவட்டம், பத்பராவில் உள்ள அவரது வீட்டின் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இது பற்றி கேள்விப்பட்டதும் டெல்லியில் இருந்த அர்ஜுன் சிங் அவசரமாக வீடு திரும்பினார். இது குறித்து அர்ஜுன் சிங் கூறுைகயில், ‘‘இது, திரிணாமுல் காங்கிரசாரின் திட்டமிட்ட சதி. பபானிபூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் மேற்பார்வையாளராக கட்சி தலைமை என்னை நியமித்துள்ளது.

இதனால், தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயத்தில் திரிணாமுல் காங்கிரசார் என்னை கொல்ல சதி செய்துள்ளனர்,’’ என்றார். இந்த தாக்குதலுக்கு எதிர்க்கட்சி தலைவரான பாஜ.வின் சுவேந்து அதிகாரி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கவர்னர் குற்றச்சாட்டு பாஜ எம்பி வீட்டில் குண்டு வீசப்பட்ட சம்பவம் குறித்து கவர்னர் ஜெகதீப் தன்கார் டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘குண்டுவீச்சு சம்பவம் வேண்டும் என்றே நிகழ்த்தப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் அமைதிக்கான அறிகுறியே இல்லை. சட்டம் ஒழுங்கு கவலையளிக்கிறது,’ என குறிப்பிட்டுள்ளார்.

Tags : BJP ,West Bengal , West Bengal, BJP MP, bombing
× RELATED மே.வங்கத்துக்கு எதிராக பாஜ அவதூறு...