தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார் பணியாளர்கள் நல வாரியம்: அமைச்சர் தகவல்

சென்னை: தமிழக சட்டப் பேரவையில் நேற்று சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு அமைச்சர்  செஞ்சி கே.எஸ்.மஸ்தான் பதிலளித்த பின்பு புதிய அறிவிப்புகளை வெளியிட்டு  பேசியதாவது:  சிறுபான்மையினர் நல விடுதிகளில் மாணவ, மாணவியரின் சேர்க்கைக்கு வருமான வரம்பு 1 லட்சம் ரூபாயிலிருந்து 2  லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும். உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல  வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர் அல்லது குடும்பத்தினருக்கு வழங்கப்படும் திருமண உதவித் தொகை ஆண்களுக்கு 2,000 ரூபாயிலிருந்து 3,000 ரூபாயாகவும் பெண்களுக்கு 2,000 ரூபாயிலிருந்து 5,000 ரூபாயாகவும்  உயர்த்தப்படும்.

பொருளாதாரத்தில் பின் தங்கிய சிறுபான்மையினர் வகுப்பை  சார்ந்தவர்களின் பொருளாதார முன்னேற்றத்துக்காக ஆயிரம்  மின்மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரங்கள் 45 லட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும். அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் நல வாரியங்கள் மூலம் வழங்கப்பட்டு வருவதை போன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் அமைக்கப்படும்.

Related Stories:

>