×

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு 11ம் தேதி நீட் தேர்வு எம்பிபிஎஸ் முடித்த 1.74 லட்சம் பேர் பங்கேற்பு

சென்னை: இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவப் பட்டமேற்படிப்புகளான எம்டி, எம்எஸ் படிப்புகளுக்கு 30 ஆயிரம், இடங்களும், தமிழகத்தில் மட்டும் சுமார் 4 ஆயிரம் இடங்களும் உள்ளன.  இந்த இடங்கள் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் தகுதிப் பெறுவர்களைக் கொண்டு நிரப்பப்படுகிறது. இந்நிலையில், 2021-22ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு ஏப்ரல் 18ம் தேதி என அறிவிக்கப்பட்டது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வு வரும் 11ம் தேதி நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் மட்டும் எம்பிபிஎஸ் முடித்த சுமார் 20 ஆயிரம் பேர் உட்பட இந்தியா முழுவதும் 1.74 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். இந்தியா முழுவதும் 260 நகரங்களில் 800 மையங்களில் வரும் 11ம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை ஆன்லைன் மூலம் நீட் தேர்வு நடைபெறுகிறது. நீட் தேர்வு முடிவுகளை அக்டோபர் முதல் வாரத்தில் வெளியிட திட்டமிட்டுள்ள தேசிய தேர்வுகள் வாரியம் (என்டிஏ), கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றி தேர்வு நடைபெறவுள்ளதாக தெரிவித்துள்ளது.

Tags : Masters in Medical Studies, NEED Exam, MBBS
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...