×

ஜவுளித்துறையை ஊக்குவிக்க ரூ.10,683 கோடி பருப்பு, கடுகு, கோதுமை ஆதரவு விலை அதிகரிப்பு: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: பருப்பு, கடுகு, கோதுமை போன்றவற்றின் குறைந்தபட்ச ஆதரவு விலையை ஒன்றிய அரசு உயர்த்தியுள்ளது. நடப்பாண்டுக்கான பட்ஜெட் தாக்கலின் போது, ரூ.1.97 லட்சம் கோடி மதிப்பில் 13 துறைகளுக்கு உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டம் அமல்படுத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது. அதன்படி, ரூ.10,683 கோடியில் ஜவுளித்துறைக்கு இத்திட்டத்தை நீட்டிக்க, பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் நேற்று ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்படி, மனிதனால் உற்பத்தி செய்யப்பட்ட நூல், துணி வகைகளின் உற்பத்தியும், ஜவுளி தொழில்நுட்பம் சார்ந்த துறைகளும் ஊக்குவிக்கப்படும்.

இதே போல், ரபி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தவும் அமைச்சரவையில் ஒப்புதல் தரப்பட்டுள்ளது. இதன்படி, மசூர் பருப்பு மற்றும் கடுகுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.400, பருப்புக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.130 கோதுமை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.40 அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம், கோதுமை குவிண்டால் விலை ரூ.1,975ல் இருந்து ரூ.2,015 ஆக  உயர்த்தப்பட்டுள்ளது. மசூர் பருப்பு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.5,100ல் இருந்து ரூ.5,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. எண்ணெய் வித்துக்கள் மற்றும் கடுகின் ஆதரவு விலை ரூ.4,650ல் இருந்து ரூ.5,050 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. குங்குமப்பூவின் குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.5,327ல் இருந்து ரூ. 5,441 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Tags : Union Cabinet , Textile, Pulses, Mustard, Wheat Support Prices, Union Cabinet
× RELATED சீட் இல்லாததால் அமைச்சர் பதவி...