உத்தரகாண்ட் ஆளுநர் பேபி திடீர் ராஜினாமா: தீவிர அரசியலில் ஈடுபட முடிவு?

டேராடூன்: உத்தரகாண்ட் மாநில ஆளுநர் பேபி ராணி மவுர்யா.  65 வயதான இவர், கடந்த 2018, ஆகஸ்ட் 26ம் தேதி இம்மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். மூன்று ஆண்டு பதவிக் காலம் மட்டுமே முடிந்த நிலையில், நேற்று இவர் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். ஜனாதிபதிக்கு இவர் தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார். அதில். சொந்த காரணங்களுக்காக பதவி விலகுவதாக தெரிவித்துள்ளார்.

பாஜ.வை சேர்ந்த இவர், கடந்த 5ம் தேதி டெல்லி சென்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை திடீரென சந்தித்து பேசினார். எனவே, இவருடைய ராஜினாமா முடிவில் முக்கிய பின்னணி இருக்கலாம் என கருதப்படுகிறது.  இவர் பாஜ மேலிடத்தின் உத்தரவுப்படி, தீவிர அரசியலில் ஈடுபடுவதற்காக பதவி விலகி இருக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories:

>