×

தேசிய நெடுஞ்சாலையில் விமானப்படை விமானங்கள் அவசரமாக தரையிறங்க தளம் : ராஜ்நாத் சிங்,நிதின் கட்கரி தொடக்கி வைக்கின்றனர்!!

டெல்லி :பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர், நாளை, பார்மரில் (ராஜஸ்தான்) தேசிய நெடுஞ்சாலை-925 கந்தவ் பகசார் பிரிவில், அவசரகால தரையிறங்கும் தளத்தைத் துவக்கி வைக்க உள்ளனர். இந்திய விமானப்படையின் விமானங்களை அவசரமாக தரையிறக்க தேசிய நெடுஞ்சாலை பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறை.

இந்தத் திட்டம் சர்வதேச எல்லையில் அமைந்துள்ள பார்மர் மற்றும் ஜாலோர் மாவட்டங்களின் கிராமங்களுக்கிடையேயான தொடர்பை மேம்படுத்தும். மேற்கு எல்லைப் பகுதியில் அமைந்துள்ள இந்தப் பகுதி இந்திய இராணுவத்தின் கண்காணிப்பை எளிதாக்குவதோடு நாட்டின் அடிப்படை உள்கட்டமைப்பையும் வலுப்படுத்தும்.

இந்த அவசர லேண்டிங் பகுதியைத் தவிர, விமானப்படை/இந்திய இராணுவத்தின் தேவைகளுக்கு ஏற்ப இந்தத் திட்டத்தில் குந்தான்புரா, சிங்கானியா மற்றும் பகசார் கிராமங்களில் 3 ஹெலிபேட்கள் (ஒவ்வொன்றும் 100 x 30 மீட்டர் அளவு) கட்டப்பட்டுள்ளன. இது நாட்டின் மேற்கு சர்வதேச எல்லையில் இந்திய இராணுவத்தின் கண்காணிப்பு வசதியையும், பாதுகாப்பு வலையமைப்பையும் வலுப்படுத்தும்.

Tags : Rajnath Singh ,Nidin Kakari , ராஜ்நாத் சிங்,நிதின் கட்கரி
× RELATED ரூ.39,125 கோடிக்கு ஏவுகணைகள் போர்விமானங்கள் வாங்குகிறது இந்தியா