×

போதை பொருள் வழக்கு: ‘பாகுபலி’ நடிகர் ராணா அமலாக்க துறையில் ஆஜர்

திருமலை: தெலங்கானாவில் போதை மருந்து பயன்படுத்திய விவகாரத்தில் பல தெலுங்கு திரைப்பட இயக்குனர்கள், நடிகர், நடிகைகள் கடந்த 2017ம் ஆண்டு முதல் அடுத்தடுத்து சிக்கி வருகின்றனர். இயக்குனர் பூரி ஜெகநாத், நடிகைகள் சார்மி கவுர், ரகுல் ப்ரீத் சிங், நடிகர்கள் ராணா, நவ்தீப், ரவிதேஜா என 12 திரை பிரபலங்கள் சாட்சியாக மட்டுமே சேர்க்கப்பட்டு விசாரணை நடந்து வந்தது. போதை மருந்து விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி கெல்வின் என்பவரிடம் கடந்த வாரம் கலால் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவரது செல்போனில் இருந்த தெலுங்கு திரைப்பட நடிகர், நடிகைகளின் ‘பர்ஷனல்’ எண்கள் இருந்தது தெரிந்தது. அதனடிப்படையில் இவர்களுக்கெல்லாம் போதை மருந்து சப்ளை செய்யப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை முடுக்கி விடப்பட்டது.

மேலும் கெல்வின், அரசு தரப்பு சாட்சியாக மாறி ஒப்புதல் வாக்குமூலம் அளித்து வருகிறார். இதில் போதை மருந்து வழக்கில் பண மோசடியும் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இதனால் இந்த வழக்கை அமலாக்க துறை அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே இயக்குனர் பூரி ஜெகநாத், நடிகைகள் சார்மி, ரகுல்பிரீத் சிங் ஆகியோர் கோர்ட்டில் ஆஜரான நிலையில் இன்று ‘பாகுபலி’ சினிமாவில் நடித்த வில்லன் நடிகர் ராணா, ஐதராபாத் அமலாக்க துறை அதிகாரிகள் முன்பு நேரில் ஆஜரானார். இன்று காலை 10 மணியளவில் ஆஜரான அவரிடம் மாலை 6 மணி வரை விசாரணை நடைபெறும் என கூறப்படுகிறது.

Tags : Rana Azhar , Drug case, actor Rana
× RELATED இந்தியாவில் பிரதமர் மோடி ஊழல் பள்ளியை...