×

பல்வேறு முக்கியத்துவம் குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதால் சட்டபேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தோம் : எடப்பாடி பழனிசாமி!!


சென்னை:பல்வேறு முக்கியத்துவம் குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதால் சட்டபேரவையில் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் அதிமுக உறுப்பினர் கே.பி.முனுசாமி பேச எழும்பினர்.
சபாநாயகர் அப்பாவு: இன்று காலை 9 மணிக்கே எனது அறைக்கு வந்துவிட்டேன். எது பற்றி பேச போகிறீர்கள் என்று அனுமதி கேட்கவில்லை. பூஜ்ய நேரத்தில் பேச வேண்டும் என்றால் எது குறித்து பேச போகிறீர்கள் என்று கூறி அனுமதி பெற வேண்டும். அப்படி செய்தால் சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் கூறி அதற்கான பதிலை கேட்க முடியும். (இருந்த போதிலும் கே.பி.முனுசாமி பேச சபாநாயகர் பேச அனுமதி அளித்தார்)

கே.பி.முனுசாமி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை தமிழக அரசு முடக்குகிறது என்று சில கருத்துகளை கூறினார். (கே.பி.முனுசாமி பேச்சு அவைக் குறிப்பில் இருந்து சபாநாயகர் நீக்கினார்)
 சபாநாயகர்: பூஜ்ய நேரத்தில் கேள்வி தான் கேட்க முடியும். விவாதம் பண்ண முடியாது. அரசியல் மேடை போன்று பேச முடியாது. பூஜ்ய நேரத்தில் பேசவேண்டும் என்றால் சபாநாயகரிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி: கே.பி.முனுசாமி பேச அனுமதிக்க வேண்டும்.

சபாநாயகர்: என்னிடம் முன் அனுமதி பெறாமல் எப்படி பேச முடியும். அப்படி பேசினால் அமைச்சரிடம் எப்படி பதில் கிடைக்கும். முடிந்த ஒரு பிரச்சனை பற்றி ஏன் பேச முயற்சிக்கிறீர்கள். இந்த பிரச்சனை குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெளிவாக பதில் கூறியுள்ளார். அதனால் பேச அனுமதிக்க முடியாது.

அப்போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இதை கண்டித்து வெளிநடப்பு செய்வதாக கூறி அவர் தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் வெளியில் சென்றனர்.

அப்போது சபாநாயகர் ஏதோ ஒரு நோக்கத்திற்காக வெளிநடப்பு செய்கிறீர்கள். பேரவை தலைவர் என்ற முறையில் கேட்கிறேன். வெளியில் போய்விட்டு வந்து கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது நீங்கள் (எடப்பாடி பழனிச்சாமி) பேசுங்கள் என்றார். இதை தொடர்ந்து வெளியில் வந்த அதிமுக உறுப்பினர்கள் வெளியில் வந்தனர்.

பின்னர் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நிருபர்களிடம் கூறியதாவது:
சட்டபேரவையில் முக்கியத்துவம் குறித்து உறுப்பினர் கே.பி.முனுசாமி சட்டமன்றத்தில் எழுப்பிய போது அதை சட்டபேரவை தலைவர் அனுமதிக்கவில்லை. எவ்வளவோ வற்புறுத்தியும் அனுமதி கொடுக்கவில்லை. அதன்பிறகு ஒரு நிமிடம் பேச அனுமதி அளிப்பதாக கூறினார். அதன்பிறகு உறுப்பினர் கே.பி.முனுசாமி கருத்தை தெரிவித்தார். அந்த கருத்தையும் அவைக்குறிப்பில் இருந்து எடுத்து விட்டதாக தகவல் தெரிகிறது.
அதோடு நான் எழுந்து அவசர முக்கியத்துவம் குறித்து கருத்தை கே.பி.முனுசாமி பேச அனுமதிக்க வேண்டும் என்று கூறினேன். அதன்பிறகு சில கருத்துகளை நான் கூற முயன்றேன் அதற்கு சபாநாயகர் அதற்கு அனுமதி தரவில்லை. எனவே சட்டமன்றத்தில் எனது கருத்துகளை கூறிவிட்டோம்.   இவ்வாறு அவர் கூறினார்.



Tags : Edappadi Palanisamy , எடப்பாடி பழனிச்சாமி
× RELATED நிலையான கொள்கையே இல்லாத கட்சி பாமக: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்