சென்னையில் பட்டதாரி இளைஞரை குடிபோதையில் அடித்து கொன்று கடலில் வீசிய நண்பர் கைது!: போலீசார் நடவடிக்கை..!!

சென்னை: சென்னையில் பி.சி.ஏ. பட்டதாரி இளைஞரை குடிபோதையில் அடித்து கொன்று கடலில் தள்ளிய நண்பரை போலீசார் கைது செய்தனர். சென்னை கிரீன் வேஸ் சாலையில் உள்ள அறிஞர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணனின் மகன் மகேஸ்வரன், பி.சி.ஏ. பட்டப்படிப்பு முடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். கடந்த 4ம் தேதி இரவு வெளியே சென்ற மகேஸ்வரன் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் பட்டினம்பாக்கம் கடற்கரையில் நேற்று ஆண் சடலம் ஒன்று ஒதுங்கியது. அது மாயமான மகேஸ்வரன் என்பது விசாரணையில் தெரியவந்தது. இளைஞரின் கையில் வெட்டு காயங்களும், உடலில் மீன் கடித்த காயங்களும் இருந்தன.

முதற்கட்ட விசாரணையில் பட்டினம்பாக்கம் முகத்துவாரம் அருகே மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் மகேஸ்வரனை அவரது நண்பர் கார்த்திக் அடித்து கொலை செய்து கடலில் தள்ளிவிட்டது தெரியவந்தது. தமது மகனின் கொலையில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக மகேஸ்வரனின் பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். இதனிடையே குடிபோதையில் பட்டதாரியை அடித்துக் கொன்ற அவரது நண்பர் கார்த்திக் கைது செய்யப்பட்டுள்ளார். பட்டதாரி கொலையில் தொடர்புடைய மணி என்பவர் உள்பட சிலரை போலீஸ் வலைவீசி தேடி வருகிறது.

Related Stories:

>