×

தாம்பரம் - செங்கல்பட்டு இடையே மின்சார ரயில்கள் பகுதியாக ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம் - செங்கல்பட்டு இடையே பணியாளர் சிறப்பு மின்சார ரயில்கள், இன்று காலை 10 மணிமுதல் 2 மணிவரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: சென்னை எழும்பூர் - விழுப்புரம் வழித்தடத்தில் தாம்பரம் பகுதியில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் அவ்வழியாக செல்லும் பணியாளர் சிறப்பு மின்சார ரயில்கள் இன்று காலை 10 மணிமுதல் 2 மணிவரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. அதன்படி கும்மிடிப்பூண்டி - செங்கல்பட்டு இடையே காலை 7.50 மணிக்கு இயக்கப்படும் பணியாளர் சிறப்பு மின்சார ரயில், தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இடையே பகுதியாக ரத்து செய்யபப்டுகிறது. கடற்கரையில் இருந்து காலை 9.32, காலை 10.10, காலை 10.56, முற்பகல் 11.50, மதியம் 12.15 மணிக்கு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில்கள், தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இடையே பகுதியாக ரத்து செய்யபப்டுகிறது.

* செங்கல்பட்டில் இருந்து காலை 10.30 மணிக்கு கும்மிடிப்பூண்டிக்கு செல்லும் மின்சார ரயில் மற்றும் செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு காலை 9.40, முற்பகல் 11.00, 11.30, மதியம் 12.20, 1.00 மணிக்கு இயக்கப்படும் பணியாளர் சிறப்பு மின்சார ரயில்கள், செங்கல்பட்டு மற்றும் தாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

காஞ்சிபுரம் - சென்னை கடற்கரை (வண்டி எண்: 40704) இடையே காலை 9.15 மணிக்கு இயக்கப்படும் ரயில் மற்றும் திருமால்பூர் - சென்னை கடற்கரை (வண்டி எண்: 40804) இடையே காலை 10.40 மணிக்கு இயக்கப்படும் பணியாளர் சிறப்பு மின்சார ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதற்கு பதில் அதே வழித்தடத்தில் காஞ்சிபுரம் - சென்னை கடற்கரை இடையே மதியம் 12 மணி, திருமால்பூர் - சென்னை கடற்கரை இடையே மதியம் 12 மணிக்கும் 2 பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Tags : Tambaram ,Chengalpattu ,Southern Railway , Tambaram - Chengalpattu electric trains partially canceled: Southern Railway notice
× RELATED மனைவியை கொலை செய்த வழக்கில் கணவருக்கு...