9.50 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மையம் திறப்பு

வாலாஜாபாத்: வாலாஜாபாத் பேரூராட்சி சேர்க்காடு ஆரம்பப் பள்ளி வளாகத்தில், ரூ.9.5 லட்சத்தில் புதிய அங்கன்வாடி மையம் திறக்கப்பட்டது. வாலாஜாபாத் பேரூராட்சி சேர்க்காடு பகுதியில் உள்ள ஆரம்பப் பள்ளியின் வளாகத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வந்தது. இந்த அங்கன்வாடி மையம் சிதலமடைந்து மிக ஆபத்தான நிலையில் இருந்தது. அதனை அப்புறப்படுத்தி புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என கிராம மக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இதைதொடர்ந்து எம்பி தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.9.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது. பேரூராட்சி செயல் அலுவலர் பிரேமா தலைமை தாங்கினார்.  எம்எல்ஏ சுந்தர், எம்பி செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு சேர்க்காடு அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தனர். இதில் பேரூர் செயலாளர் பாண்டியன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட ஒன்றிய அலுவலர் கல்யாணி, திமுக பேரூர் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள்உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: