×

தமிழக அனல் மின் நிலையங்களில் 71,000 மெட்ரிக் டன் நிலக்கரி மாயம்: அமைச்சர் செந்தில்பாலாஜி குற்றச்சாட்டு

* விவசாயிகளுக்கு மின் இணைப்பு தராமல் இழுத்தடித்த அதிமுக அரசு
* கூடுதல் விலைக்கு சூரிய ஒளி மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டது

சென்னை: சட்டப்பேரவையில் மின்சாரத்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதத்திற்கு பதில் அளித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரில் சூரிய சக்தி உள்ளிட்ட மரபு சாரா எரிசக்திக்கான திட்டங்களை மேம்படுத்த தமிழ்நாடு மின் பகிர்மான கழகம்,இந்திய மரபுசாரா எரிசக்தி மேம்பாட்டு நிறுவனத்துடன் ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 500 கோடி அளவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.  இந்தியாவிலேயே எந்தவொரு மாநிலத்திலும் இப்படி புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டதில்லை. அனைத்து மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக தமிழகம் உள்ளது.

 2008 திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட 3 அனல் மின் நிலையங்கள் உற்பத்தியை தொடங்கி இருக்கின்றன. இந்த திட்டம் மூலம் 1300 மெகாவாட் மின்சாரத்தை பெருக்கியிருக்கின்றன. இதன் மூலம், 4,770 மெகாவாட் சொந்த உற்பத்தி ஆகும்.  இந்த அனல் மின் நிலையங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படவில்லை. கடந்த 2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சிக்காலத்தில் அனல்மின் நிலையங்கள் மூலம் 85 சதவிகிதமாக இருந்த மின் உற்பத்தி அதிமுக ஆட்சியில் 2011 முதல் 2016 ல் 78 சதவிகிதமாக குறைந்து பின்னர் 2016 முதல் 2021 வரை 58 சதவிகிதமாக குறைந்தது. இந்த உற்பத்தி ஏன் குறைக்கப்பட்டது ஏன் என்பதை வினாவாக எழுப்புகிறோம்.

தனியாரிடம் மின்சாரத்தை வாங்குவதற்காகதான் மின் உற்பத்தி குறைக்கப்பட்டதோ என்ற ஐயம் எழுகிறது. புனல் மின் உற்பத்தியை பொறுத்தவரையில் 10 ஆண்டுகளில் கூடுதல் உற்பத்தி என்பது 58 மெகாவாட் தான். அதிமுக ஆட்சிக்காலத்தில் வெளிமாநிலங்களில் மின்சாரம் வாங்குவதில் குறுகிய கால ஒப்பந்தம் போடாமல் 25 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டது. அதிமுக ஆட்சியில் வெளியில் 7 ரூபாய் 1 பைசாவுக்கு வாங்கிய மின்சாரத்தை, தமிழ்நாடு எரிசக்தி கழகம் மூலமாகவே ரூ.2.61 பைசாவுக்கு வாங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

இந்த காலகட்டத்தில் 6.32 பைசாவுக்கு தர நிறுவனங்ள் தயாரக இருந்தது. ஆனால், 7 ரூபாய் 1 பைசாவுக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. 2 ரூபாய் 61 பைசாவுக்கு 1000 மெகாவட் மின்சாரம் கொள்முதல் செய்ய வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது. தனியாரிடம் மின்சாரம் கொள்முதல் செய்யும் விலையில் சராசரியாக ரூ.4.57ல் தொடங்கி ரூ.9.20 வரை தரப்படுகிறது. 3 ஆண்டுகளுக்கு பிறகு தனியார் நிறுவனம் மின் உற்பத்தியை தொடங்கியுள்ளது. அதற்குள், மின்சார விலை குறைந்தும், ஆனால், அதிக விலைக்கு வாங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மின்வாரியத்துக்கு கடுமையான இழப்பு ஏற்பட்டுள்ளது. 12 மின் திட்டங்கள் நிலுவையில் உள்ளது.

தொடங்கப்படாத திட்டம் 5, நிறுத்தப்பட்ட திட்டம்  3, தொடங்கி பணிகளை நிறுத்திய திட்டம் 7 ஆகும். தொடங்கப்படாத திட்டங்கள் கடந்த காலங்களில் பல்வேறு நிலைகளில் அறிவிப்புகளாக வெளியிடப்பட்டுள்ளது. மின்வாரியத்தில் 1 லட்சத்து 59 ஆயிரம் கோடி கடன் ஆகும். ஆண்டுக்கு 15 ஆயிரம் கோடி வட்டி கட்டப்படுகிறது. வடசென்னை அனல் மின் நிலையத்திற்கு ஆய்வுக்கு சென்ற போது இருப்பு கணக்கை விட நிலக்கரி குறைவாக இருப்பது கண்டறியப்பட்டதாகவும் முதல்கட்ட தகவலின்படி 2 லட்சத்து 38 ஆயிரத்து 437 மெட்ரிக் டன் காணவில்லை. அதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட போது இருப்பை விட 71 ஆயிரத்து 587 மெட்ரிக் டன் நிலக்கரி குறைவாக இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

அதிமுக உறுப்பினர் தங்கமணி, தான் அமைச்சராக இருந்த போதே வடசென்னையில் நிலக்கரி இருப்பை விட குறைவாக இருப்பது கண்டறியப்பட்டதாகவும், அது தொடர்பாக ஆய்வு செய்ய இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். அந்த குழு ஆய்வு செய்ததாக கூறினார். ஆனால், அந்த குழு ஆய்வு செய்ததாக எந்தவொரு அறிக்கையிலும் இல்லை. அந்த குழு கடந்த ஏப்ரல் 28ம் தேதி தான் அமைக்கப்பட்டது. அந்த குழு எந்த ஆய்வும் செய்யவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Tamil Nadu ,Minister ,Senthilpalaji , 71,000 metric tonnes of coal in Tamil Nadu thermal power plants: Minister Senthilpalaji
× RELATED அமைதிப்பூங்காவான தமிழகம் என மீண்டும்...