திருப்பூரில் 5 ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அரசு பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தாராபுரம் கொளத்துப்பாளையம் அரசு பள்ளியில் பணியாற்றி வந்த பகுதி நேர ஆசிரியருக்கு  நேற்று முன்தினம் தொற்று உறுதியானது. இதன் மூலம் மாவட்டம் முழுவதும் 5 ஆசிரியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதையடுத்து மாவட்டம் முழுவதும் பள்ளிகளில்  கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரமாக கடைபிடிக்க மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ரமேஷ் அறிவுறுத்தி உள்ளார். இதேபோல டெல்டா மாவட்டங்களில் அரசு பள்ளி ஆசிரியை, 5 மாணவி, 2 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலையில்: திருவண்ணாமலை மாவட்டம், சாமாசிபாடி தனியார் பள்ளியில் ஒரு ஆசிரியருக்கும், அனந்தபுரம் அரசு பள்ளி ஆசிரியருக்கும், கீழ்கச்சிராப்பட்டு பள்ளி மாணவி ஒருவருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதியானதால், அந்த பள்ளிகளுக்கும் 3 நாள் விடுமுறை அளிக்கப்பட்டது. கீக்களூர் அரசு பள்ளி 9ம் வகுப்பு மாணவிக்கும் கொரோனா தொற்று நேற்று உறுதியானது.

Related Stories:

>