×

டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ.500 உயர்வு: டாஸ்மாக் வருவாய் ரூ.7907.61 கோடி

சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மானியக்கோரிக்கையின் போது அமைச்சர் செந்தில்பாலாஜி வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:
* உரிமங்கள் வழங்குவதில் வெளிப்படை தன்மையை உருவாக்கவும், உரிமங்களை புதுப்பிக்கவும், ஏற்றுமதி, இறக்குமதிக்கான அனுமதி ஆணைகள் வழங்குவதற்குரிய கால அவகாசத்தினை வெகுவாக குறைக்கும் வகையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையில் 74 சேவைகள் இணையவழி மூலமாக வழங்கும் வகையில் மின் ஆளுமை நடவடிக்கைகள் மற்றும் கணினிமயமாக்குவதற்கு இந்த நிதியாண்டில் ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
* தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் 6761 மேற்பார்வையாளர்கள், 15090 விற்பனையாளர்கள் மற்றும் 3158 உதவி விற்பனையாளர்கள் என மொத்தம் 25009 சில்லரை விற்பனை பணியாளர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். மாதத்தொகுப்பூதியம் ரூ.500 கூடுதலாக ஏப்ரல் 2021 முதல் உயர்த்தி வழங்கப்படும். இதற்காக ஆண்டொன்றுக்கு ரூ.15.01 கோடி நிதி கூடுதல் செலவாகும்.
* தேனி மாவட்டத்தில் மது விலக்கு அமலாக்க பிரிவிற்கு காவல்துறை துணை கண்காணிப்பாளர் பணியிடம் உருவாக்கப்படும்.
தமிழகத்தில் 2018-19ம் ஆண்டில் மதுவிற்பனை செய்யப்பட்டதில் ரூ.31157.83 கோடி, 2019-20ம் ஆண்டில் மதுவிற்பனை செய்யப்பட்டதில் ரூ.33133.24 கோடி, 2020-21ம் ஆண்டில் ரூ.33811.14 கோடி, 2021-22ம் ஆண்டில் 31.7.2021 வரை ரூ.7907.61 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

* ‘லோ வோல்டேஜ்’ சரி செய்ய ஒருங்கிணைந்த மேம்பாட்டுத்திட்டம்
சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட எரிசக்தித்துறை கொள்கை விளக்கக்குறிப்பில், அமைச்சர் செந்தில்பாலாஜி, ‘அதிக மின்சுமையுள்ள மின்மாற்றிகள் மற்றும் குறைந்த மின்னழுத்தம் உள்ள பகுதிகளில் ஏற்படும் சிரமங்களை நிவர்த்தி செய்ய 5,705 கூடுதல் மின்மாற்றிகளை நிறுவி மின்பளுவை குறைப்பதற்கும் 3,200 கூடுதல் மின்மாற்றிகளை நிறுவி குறைந்த மின்னழுத்தத்தை சரிசெய்யவும், மொத்தம் 8905 மின்மாற்றிகளை ரூ.625 கோடி மதிப்பீட்டில் திட்டம் வகுக்கப்பட்டு நான்கு மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது’ எனக்கூறப்பட்டுள்ளது.


Tags : Tasmag , Rs 500 monthly increase for Tasmac employees: Tasmag earns Rs 7907.61 crore
× RELATED பொது விடுமுறை நாட்களில்...