வடசென்னை அனல் மின்திட்டம் நிலை-3க்கு ஆண்டுக்கு 1 மில்லியன் டன் நிலக்கரி கொள்முதல்

சென்னை:சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட எரிசக்தித்துறை கொள்கை விளக்கக்குறிப்பில், அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியிருப்பதாவது: தற்பொழுது கட்டுமானத்தில் உள்ள மிக உய்ய அனல் மின்திட்டங்களின் கொதிகலன்கள் குறைந்த சாம்பல் அளவு அதிகபட்சமாக 26.5% கொண்ட நிலக்கரியை உபயோகப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. எனவே குறைந்த சாம்பல் அளவு கொண்ட நிலக்கரியை இறக்குமதி செய்து, உள்நாட்டு நிலக்கரியுடன் கலந்து பயன்படுத்த வேண்டியுள்ளது. வடசென்னை அனல் மின்திட்டம் நிலை 3றிற்கு ஆண்டொன்றுக்கு சுமார் 1 மில்லியன் டன் நிலக்கரியை நீண்ட கால கொள்முதல் மூலம் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories:

More
>