×

ஜனாதிபதிக்கு ஓபிஎஸ் கடிதம்

சென்னை: மனைவி காலமானதையொட்டி ஜனாதிபதி இரங்கல் கடிதம் அனுப்பியதற்கு ஓ.பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு நேற்று எழுதியுள்ள கடிதம்: எனது மனைவி காலமானதற்கு இரங்கல் தெரிவித்து தாங்கள் அனுப்பிய இரங்கல் கடிதம் கிடைத்தது. எனக்கு மற்றும் குடும்பத்தினருக்கு ஏற்பட்ட கடினமான நேரத்தில் உங்களின் ஆறுதலுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Tags : OPS , OPS letter to the President
× RELATED ஒரிஜினலை ரவுண்டு கட்டும் டூப்ளிக்கேட்டுகள்: ‘OPS’களின் அட்ராசிட்டி