சிறைகளை சீர்திருத்த மையங்களாக மாற்ற நடவடிக்கை: அமைச்சர் எஸ்.ரகுபதி அறிவிப்பு

சென்னை: சட்டப்பேரவையில் சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் மானியக்கோரிக்கையின் போது சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி வெளியிட்ட அறிவிப்பு:

* காஞ்சிபுரத்தில் தற்போது இயங்கி வரும் மாவட்ட நீதிமன்றம் எண்2ஐ முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றமாக மாற்றி அமைக்கப்படும்.

* காஞ்சிபுரத்தில், ஒரு முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்படும்.

* சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்குறைஞர்களுக்கான கூடுதல் வளாக கட்டிடம் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் ரூ.4.28 கோடி செலவில் கட்டப்படும்.

* சென்னையில் உள்ள சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை தலைமை அலுவலகத்துக்கு, 40 கணினிகள் மற்றும் 10 நகலெடுக்கும் இயந்திரங்கள் ரூ.44 லட்சத்தில் கொள்முதல் செய்யப்படும்.

* அனைத்து மத்திய சிறைகள், பெண்கள் தனிச்சிறைகள்(புழல், வேலூர், திருச்சி, கோவை, மதுரை) மற்றும் மாவட்ட சிறை(ம) இளம் குற்றவாளிகள் சீர்திருத்தப்பள்ளி, புதுக்கோட்டை ஆகியவற்றிற்கு 15 கனரக சலவை இயந்திரங்கள்  ரூ.60 லட்சத்தில் கொள்முதல் செய்யப்படும்.

* அனைத்து மத்திய சிறைகளுக்கும் 9 ஊடுகதிர் அலகிடல் கருவிகள், பழைய இயந்திரங்களுக்கு மாற்றீடாக ரூ.180 லட்சம் செலவில் கொள்முதல் செய்யப்படும்.

* சிறை பணியாளர் குடியிருப்புகளில் 500 லிட்டர் கொள்ளவு  கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு சாதனம் ரூ.18.90 செலவில் நிறுவப்படும். சிறைகளை சீர்திருத்த மையங்களாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, சிறைவாசிகளின் சிறை தண்டனை முடிந்ததும், அவர்கள் இயல்பான வாழ்க்கைக்கு திரும்புவதற்கான விரிவான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

Related Stories:

>